புதிதாகக் கட்டிய

புதிதாகக் கட்டிய

புதிதாகக் கட்டிய வீட்டின் உள்பகுதி முழுதும் சுத்த மாகக் கழுவி துடைத்து பசுமாட்டின் கோமியம் வீடு முழுதும் தெளிக்க வேண்டும். வீடு முழுதும் சாம்பிராணி புகை போட வேண்டும்.


ஒரு பூசணிக்காயில் பூதத்தின் முகம் வரைந்து அதள் கண்களிலும், தொங்கும் நாக்கிலும் சிவப்பு வர்ணம் பூச வேண்டும். பூசணிக்காய் முழுதும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்த வேண்டும். ஒரு தேங்காய் மீது கற்பூரம் வைத்து வீடு முழுதும் உள் புறமும் வெளிப்புறமும் சுற்றி விட்டு வீட்டின் எதிரே சிதறு தேங்காயாக உடைத்துவிட வேண்டும்.


பூசணிகாய்க்கு சாம்பிராணி புகைப் போட்டு கற்பூரம் காட்டி ஒரு உறி போல் கம்பளிக் கயிற்றால் கட்டி அதில் இ பூசணிக்காயை வைத்து தொங்கவிட வேண்டும். உறிபோல் தயாரித்த மூன்று கம்பளிக் கயிறுகளில் ஒன்றில் படிகாரமும், ஒன்றில் எலுமிச்சம்பழமும், ஒன்றில் ஒன்பது மிளகாய் வற்றலும் சிவப்பு நூல் கொண்டு கட்டி விட வேண்டும்.


இந்தப் பூஜைகள் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பே செய்துவிட வேண்டும். இதை பெளர்ணமி அன்றோ, வெள்ளிக்கிழமை அந்தி நேரத்திலோ செய்வது நல்லது.


₹100.00